ஏர் இந்தியா சேவை முடங்கியதால் முன்னாள் மத்தியஅமைச்சர் குலாம் நபி ஆசாத் அவதியடைந்தார்.
ஸ்ரீநகரில் இருந்து டெல்லி செல்வதற்காக விமான நிலையம் வந்த ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத், ஏர் இந்தியா விமானத்துக்காக ஏறத்தாழ 4 மணிநேரம் காத்திருந்தார்.
ஆனால் ஏர் இந்தியா விமான சேவை முடங்கியதால் அவதிக்குள்ளான அவர், மாற்று விமானத்தில் ஆசாத் டெல்லி சென்றார்.