பிரேசிலில் வெள்ளப்பெருக்கினால் பலியானோர் எண்ணிக்கை 90-ஆக உயர்ந்துள்ளது.
பிரேசிலின் ரியோ கிராண்டோ டோ சுல் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது.
இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நிலையில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மேலும் 5 பேரின் உடலை மீட்பு படையினர் கைப்பற்றினர்.
இதன் மூலம் வெள்ளத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் 361 பேர் காயமடைந்துள்ள நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.