ஈரோடு மாவட்டம் அந்தியூரில், வங்கியில் மானிய கடன் பெற்றுத் தருவதாகக் கூறி கோடி கணக்கில் பணம் மற்றும் நகைகளை பெற்று இருவர் மோசடி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் பெண்களுக்கு, வங்கியில் மானிய விலையில், கடன் பெற்று தருவதாக கூறி சுமார் ஒரு கோடியே 3 லட்சம் ரொக்கமும், 228 சவரன் தங்க நகைகளும் பெற்று கருணாமூர்த்தி மற்றும் தனியார் வங்கி ஊழியர் லட்சுமணன் ஆகியோர் தலைமறைவாகினர்.
இந்நிலையில், மோசடி செய்த இருவரையும் கைது செய்யக்கோரி, பாதிக்கப்பட்டவர்கள் அந்தியூர் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.