தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென பெய்த கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதல், வெயில் வாட்டி வதைத்த போதிலும், பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், கும்பகோணம் அருகே ஏனநல்லூர், கூத்தனூர் போன்ற பகுதிகளில் திடீரென காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ததால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.