ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஆடுகளை திருடிய இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தொடர் புகாரையடுத்து காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். சந்தேகத்தின் பேரில் இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்த நான்கு பேரை பிடித்து விசாரித்ததில் சுற்றுவட்டார பகுதியில் ஆடுகளை திருடி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.