கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில், மருத்துவ தன்மை கொண்ட இயற்கை தேனை கொள்முதல் செய்ய மறுக்கும் கூட்டுறவு சங்கத்தை கண்டித்து, அலுவலகம் முன்பு தேனி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இங்கு இரண்டாயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் தேன் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தேனீ வளர்ப்போர் கூட்டுறவு சங்கம் முறையாக தேன் கொள்முதல் செய்யாததால், அலுவலகம் முன்பு தேனி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
இதனால், 2 ஆயிரத்திருக்கும் மேற்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.