தென்காசி மாவட்டம் கடையம் அருகே விவசாய தம்பதிகள், பசுமாட்டிற்கு வளைகாப்பு நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடையம் அருகேயுள்ள பூவன்குறிச்சி பகுதியை சேர்ந்த கனகராஜ் – பால சரஸ்வதி தம்பதியினர், முழு நேரமாக காளை மற்றும் பசு மாடு உள்ளிட்டவைகளை வீட்டில் வளர்த்து வருகிறார்கள்.
கன்றுக் குட்டியாக இருந்தது முதல் அவர்கள் வளர்த்து வரும் பசுமாடு ஒன்று முதல்முறையாக சினையாகி பிரசவத்திற்கு தயாராக இருந்துள்ளது.
இதனால், அந்த பசுமாட்டிற்கு வளைகாப்பு நடத்தினர். பசுமாட்டின் கொம்பில் வளையல், புத்தாடை அணிவித்ததோடு உறவினர்களை அழைத்து விருந்தும் வைத்து அசத்தினர்.