ராமநாதபுரத்தில் ஓடும் பேருந்திலிருந்து இறங்க முயன்று படுகாயமடைந்த முதியவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
புதுமடத்தைச் சேர்ந்த சீனியாகுல் என்பவர், பேன்சி கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் வழக்கம்போல் கடையைத் திறப்பதற்காக புதுமடத்திலிருந்து தனியார் பேருந்தில் சென்றுள்ளார்.
அப்போது ஓடும் பேருந்திலிருந்து இறங்க முயற்சித்த சீனியாகுலின் பின்னங்கால்கள் மீது, தனியார் பேருந்தின் பின் சக்கரம் ஏறி இறங்கியது.
இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.