நாகப்பட்டினத்தில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் கல்லூரி கனவு உயர்கல்வி வழிகாட்டல் என்ற நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினம் மாவட்ட திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் “கல்லூரி கனவு” உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை நாகை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார். மாவட்டம் முழுவதிலும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
உயர் கல்விக்கான வாய்ப்புகள், பட்டப்படிப்புகள், பட்டயப்படிப்புகள் குறித்தும், கல்லூரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பது பற்றியும் துறை வல்லுனர்கள் விளக்கம் அளித்தனர்.