கும்பகோணத்தில் நடைபெறும் மாநில அளவிலான சதுரங்க போட்டியில் வெற்றி பெற்றால், தேசிய அளவிலான சதுரங்க போட்டியில் பங்கு பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கும்பகோணத்தில் 13 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் இரு பாலருக்கும் இடையே தனித்தனியே மாநில அளவிலான சதுரங்கப் போட்டிகள் தொடங்கியது.
ஐந்து நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டியில் 700 -க்கு மேற்பட்ட வீரர்கள் ஆர்முடன் கலந்து கொண்டுள்ளனர்.
ஒன்பது சுற்று நடைபெறும் இந்த போட்டிகளில் அதிக புள்ளிகள் பெற்று வெற்றி பெறும், முதல் நான்கு நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.
அவர்கள் அனைவரும் அடுத்த மாதம் கொல்கத்தாவில் நடைபெற உள்ள தேசிய அளவிலான சதுரங்கப் போட்டியில் தமிழ்நாடு அணி சார்பில் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.