உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில், அடுக்குமாடி குடியிருப்பு லிப்டில் சிறுமியை நாய் கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செக்டார் 107ல் உள்ள குடியிருப்பின் 2வது மாடியில் நாய் ஒன்று நுழைந்து, லிப்டில் இருந்த சிறுமியை கடித்து குதறியுள்ளது.
அப்போது அங்கு இருந்த நபர், நாயை விரட்டியடித்து, சிறுமியை காப்பாற்றுகிறார்.
இச்சம்பவம் கடந்த 3ஆம் தேதி நடைபெற்றதாக அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.