அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மனைவிக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய கணவரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேவாமங்கலம் பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், மனைவி கற்பகவல்லி மற்றும் மகன் கோமகனுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், மனைவி கற்பகவல்லிக்கு சிறுநீரகம் செயல் இழந்து, கடந்த 20 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
மனைவி மீது இருந்த அதீத அன்பால், நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே அவருக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்துள்ளார்.