மதுரையில் கழிவுநீர் கால்வாயில் கிடந்த பிறந்த பெண் சிசுவால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாநகரில் உள்ள செபாஸ்டின் நகர் சர்ச் முன்பு ஓடும் கழிவுநீர் கால்வாயில், பிறந்த பெண் குழந்தையின் சடலம் மிதப்பதாக அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில், போலீசார், உடலை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், பிறந்த பெண் குழந்தையை வீசி சென்றது யார் என்பது குறித்து, அங்குள்ள சிசிடிவி கேமராக்களை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.