கரூர் மாவட்டம், தளவாபாளையத்தில் நீர்த்தேக்கத் தொட்டி கட்ட எதிர்ப்பு தெரிவித்து குடியிருப்புவாசி ஒருவர் தீக்குளிக்க முயன்றார்.
தளவாபாளையத்தில் அம்ருத் திட்டத்தின் கீழ், நீர்த்தேக்க தொட்டி கட்ட தேர்வு செய்யப்பட்ட இடத்தின் அருகே பொது வழிப்பாதை அமைக்க வேண்டும் என குடியிருப்புவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நீர்த்தேக்கத் தொட்டி கட்டும் பணியை தொடங்கக் கூடாது என கூறி, அதே பகுதியைச் சேர்ந்த செந்தில் பொற்குமரன் என்பவர் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனையடுத்து அதிகாரிகள் பணியை தற்காலிகமாக கைவிட்டு கலைந்து சென்றனர்.