ஈரோட்டில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோயில் மற்றும் அதன் வகையறா கோயில்களில் கடந்த மார்ச் 19ஆம் தேதி திருவிழா தொடங்கியது.
மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், ராமசாமி சந்து ஜவுளி வியாபாரிகள் சார்பில், கோவில் திருவிழாவையொட்டி பிரியாணி விருந்து நடைபெற்றது.
அம்மன் டெக்ஸ் உரிமையாளர் நமச்சிவாயம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், 3,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிக்கன் பிரியாணி ருசித்து மகிழ்ந்தனர்.