தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், இலவசமாக மதுபானம் கொடுக்க மறுத்த பார் ஊழியரை வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த குருசாமி, கிருஷ்ணா நகரில் உள்ள அரசு மதுபான கடை பாரில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில், சிதம்பரம்பட்டி பகுதியை சேர்ந்த மூக்கையா பாண்டியன், குருசாமியிடம் இலவசமாக மதுபானம் கேட்டுள்ளார்.
இதில் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், பார் ஊழியர் குருசாமியை அரிவாளால் வெட்டியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.