“தமிழர்கள் மற்றும் தென்னிந்தியர்கள் நிறம் குறித்து பேசி அவமானப்படுத்திய காங்கிரஸ் கட்சியுடன் உள்ள கூட்டணியை முறித்துக்கொள்ள திமுக தயாரா?” என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
தெலங்கானா மாநிலம் ராஜாம்பேட்டையில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,
“இளவரசர் ராகுல் காந்தியின் ஆலோசகர் நிறவெறியுடன் பேசியுள்ளது மிகவும் வெட்கக்கேடானது, கண்டிக்கத்தக்கது” என்றார். மேலும், “வடகிழக்கு மற்றும் தென்னிந்தியாவில் உள்ள பொதுமக்களை காங்கிரஸ் அவமானப்படுத்திவிட்டது” எனவும், “இதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது” எனவும் தெரிவித்தார்.
“தமிழ்நாட்டு மக்களின் கலாச்சாரத்தை காங்கிரஸ் கொச்சைப்படுத்திவிட்டது” என குற்றம் சாட்டியவர், “சுயமரியாதை பேசும் திமுக, காங்கிரஸ் பேச்சை எப்படி ஏற்றுக் கொள்கிறது?” எனக் கூறினார்.
“தமிழக மக்களை அவமானப்படுத்திய காங்கிரஸ் கட்சியுடன் உள்ள கூட்டணியை முறித்துக் கொள்ள திமுக தயாரா?” எனவும் பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.