நடிகர் சித்தார்த்துடன் நிச்சயதார்த்தம் ஆன நிலையில், தான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்வதாக நடிகை அதிதி ராவ் தெரிவித்துள்ளார்.
சஞ்சய் லீலா பன்சாலியின் ‘ஹீரமண்டி: தி டயமண்ட் பஜார்’ வெப் தொடரில் நடித்ததற்காக, நடிகை அதிதி ராவ் பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.
இந்நிலையில் நடிகர் சித்தார்த்துடனான தனது உறவு மகிழ்ச்சியான கட்டத்தில் இருப்பதாகவும், அதன் ஒவ்வொரு தருணத்தையும் ரசிப்பதாகவும் நடிகை அதிதி ராவ் தெரிவித்துள்ளார்.