தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே கோடை வெயிலால் வெற்றிலை காய்ந்து விழுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கும்பகோணம் அருகே ஆவணியாபுரம், மஞ்சமல்லி, சிந்தாமணி உள்ளிட்ட இடங்களில் வெற்றிலை பயிரிடப்படுகிறது.
இந்நிலையில் கோடை வெயில் காரணமாக வெற்றிலை சருகாகி காய்ந்து கொட்டுவதால், மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே வெற்றிலை விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.