புதுச்சேரியில் நண்பர்களுடன் கிணற்றில் குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பசேதராபட்டு குமரன் நகரைச் சேர்ந்த சூர்யா பணிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் சூர்யா தனது நண்பர்களுடன் சேதராபட்டு ஏரிக்கரை அருகே உள்ள கிணற்றுக்கு குளிக்க சென்றுள்ளார்.
அப்போது நீச்சல் தெரியாத சூர்யா கிணற்றில் நீரில் மூழ்கி மாயமாகியுள்ளார். இதனையடுத்து அங்கு சென்ற தீயணைப்புத் துறையினர், சூர்யாவை சடலமாக மீட்டனர்.