கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை பகுதியில் கூடுதல் பேருந்துகள் இயக்க முடியாது என தெரிவிக்கும் பனிமனை மேலாளரின் ஆடியோ வேகமாக பரவி வருகிறது.
கிராத்தூர் வழித்தடத்தில் பேருந்துகள் அடிக்கடி இயக்கப்படவில்லை எனவும் அதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் பயணி ஒருவர் பனிமனை மேலாளர் ஜெபின்னிடம் கூறியுள்ளார்.
அதற்கு பதிலளித்த ஜெபின் ஏற்கனவே உள்ள பேருந்துகளுக்கு தேவையான நடத்துநர்கள் இல்லை என்றும் இதனை நீங்கள் முதலமைச்சரிடம் சொல்லுங்கள் எனவும் பேசி இணைப்பை துண்டித்துள்ளார்.
இந்த ஆடியோ இணையத்தில் வைரல் ஆகிய வருகிறது.