கன்னியாகுமரி தாணுமாலய சாமி கோவிலில் சித்திரை தெப்ப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சுசீந்திரத்தில் அமைந்துள்ள பிரசித்திப்பெற்ற தாணுமாலய சாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரத் தெப்ப திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரத்தேரோட்டம் வரும் 16ஆம் தேதி நடைபெறுகிறது.