பிளஸ்2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புதுச்சேரி போலீசார் விருந்து வைத்தனர்.
புதுச்சேரியில் மதகடிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் திருவண்டார் கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவ மாணவிகளுக்கு போலீசார் பொன்னாடை அணிவித்தனர்.
அத்துடன், எழுது பொருட்களை இலவசமாக வழங்கினர். இதனைத் தொடர்ந்து, காவல் நிலையத்தில் மாணவ, மாணவிகளுக்கு அறுசுவை விருந்து வைத்து அசத்தினர்.