செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்தாமல் தடுக்க கடுமையான சட்டங்கள் இயற்ற வேண்டும் என நடிகர் ராஜ்குமார் ராவ் தெரிவித்துள்ளார்.
நடிகர்கள் அமீர் கான், ரன்வீர் சிங், நடிகை ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பல பிரபலங்கள் டீப் ஃபேக் வீடியோக்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த நடிகர் ராஜ்குமார் ராவ், செயற்கை நுண்ணறிவை தவறாக பயன்படுத்தாமல் தடுக்க நடவடிக்கை எடுப்பதுடன், கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும் என தெரிவித்தார்.