ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
7-வது ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு, 165 ரன்கள் எடுத்தது.
இரண்டாவதாக களமிறங்கிய ஹைதராபாத் அணி 9.4 ஓவர்களில் 167 ரன்கள் அடித்து, 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஹைதராபாத் தரப்பில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 89 ரன்களும், அபிஷேக் சர்மா 75 ரன்களும் அடித்தனர்.