மயிலாடுதுறையில் தேர்தல் நடத்தை விதியை மீறி, தமிழக அரசின் மூன்றாண்டு கால ஆட்சி நிறைவைக் கொண்டாடும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வண்ண மின் விளக்குகளால் ஜொலித்தது.
நாட்டின் 18-வது மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருவதையொட்டி, நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.
இதனை மீறி, தமிழக அரசு பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது.
தேர்தல் விதி மீறலில் ஈடுபட்ட மாவட்ட நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.