மயிலாடுதுறை மாவட்டம் ராஜகோபாலபுரம் ஸ்ரீ ஐயன் பிடாரி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
இக்கோயில் திருவிழா கடந்த 24-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழாவையொட்டி, கோயிலின் முன்பு தீக்குண்டம் அமைக்கப்பட்டிருந்தது.
இதில் இறங்கிய பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடனை செலுத்தினர். இதில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.