கன்னியாகுமரி மாவட்டம், தோட்டியோடு அருகே மறைந்த தென்னிந்தியாவின் முதல் பாஜக எம்எல்ஏவான வேலாயுதன் உடலுக்கு, ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
1996-ம் ஆண்டு பத்பநாபபுரம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று, தென்னிந்தியாவின் முதல் பாஜக எம்எல்ஏவாக தேர்வானவர் வேலாயுதம்.
இவர் வயது மூப்பின் காரணமாக மரணம் அடைந்தார். அவர்து மறைவுக்கு பல்வெறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கீழகருப்புக்கோட்டில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்த வேலாயுதத்தின் உடலுக்கு, ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.