கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஓய்வு பெற்ற காவல் அதிகாரி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி கிருஷ்ணமூர்த்தி. இவர் தனது வீட்டின் அருகே உள்ள 10 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர்.