செல்லப்பிராணிகளை பொறுப்புணர்வுடன் வளர்க்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனைக் கருத்தில்கொண்டு சென்னையில் 7 இடங்களில் உள்ள சிக்னல்களில் பசுமை நிழல் பந்தல் அமைக்கப்பட்டது.
இதனை பார்வையிட்ட மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ரிப்பன் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
மக்களின் கோரிக்கைகளை ஏற்று நிழல் பந்தல் மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
நாய்க்கடிக்கு உள்ளான சிறுமியை பார்க்க பரிதாபமாக உள்ளதாகவும் அவர் கூறினார். விலங்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தங்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் கூறினார்.
நாய் கடியால் பாதிக்கப்படுவர்களின் நிலை அறிந்து அதன் உரிமையாளர்கள் நடந்துகொள்ள வேண்டும் எனவும் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.