சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை 53 ஆயிரத்துக்கு கீழ் குறைந்து 52 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.
உச்சம் தொட்டு வரும் தங்கத்தின் விலையால் பெண்கள் தங்க நகை வாங்க தயக்கம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 53 ஆயிரத்துக்கும் கீழ் சென்றுள்ளது.
அதன்படி ஒரு சவரன் தங்கம் 52 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 15 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 615 ரூபாயாக உள்ளது. மேலும் வெள்ளியின் விலை 20 காசுகள் உயர்ந்து 88 ரூபாய் 70 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.