கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையில் முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு சொந்தமான நூலகத்தில், இலவச ஆங்கில பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
குழித்துறையில் முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு, தனது பூர்வீக வீட்டை தாய் – தந்தையரின் பெயரில் நூலகமாக மாற்றினார்.
இங்கு மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மாணவர்களுக்கு, ஆங்கிலப் பேச்சு மற்றும் எழுத்துத் திறமையை மேம்படுத்துவதற்காக, இலவச பயிற்சி வகுப்புகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.