வேலூர் மாவட்டம், ஸ்ரீ புரம் பொற்கோயிலில் அசாம் மற்றும் கர்நாடகா மாநில ஆளுநர்கள் சிறப்பு தரிசனம் செய்தனர்.
வேலூரை அடுத்த ஸ்ரீ புரம் ஸ்ரீ லட்சுமி நாராயணி பொற்கோயிலின் 32-வது ஆண்டு விழாவையொட்டி, 10 ஆயிரத்து 8 பக்தர்கள் மஞ்சள் நீர் கலசங்களுடன் ஊர்வலமாக வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.
பின்னர் ஸ்ரீ நாராயணி மூலமந்திர யாகம், ஸ்ரீ சக்தி அம்மா தலைமையில் நடைபெற்றது. இதில், அசாம் ஆளுநர் குளாப் சந்த் கட்டாரியா மற்றும் கர்நாடகா ஆளுநர் தாவர் சந்த் கேலோட் ஆகியோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.