அரியலூர் அருகே 400 கிலோ குட்காவை காரில் கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் 4 ரோடு வழியாக கும்பகோணத்திற்கு சிலர் சட்ட விரோதமாக குட்காவை காரில் கடத்தி செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார், சந்தேகத்திற்கிடமான வந்த காரை மறித்து சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 400 கிலோ குட்கா இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, காரை ஓட்டி வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நீமாராம் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், குட்கா கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் அவர்கள் பறிமுதல் செய்தனர்.