சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் கிணற்றில் விழுந்து 16 மணி நேரமாக சிக்கித் தவித்த இளைஞர் பத்திரமாக மீட்கப்பட்டார்.
காரைக்குடி டி.டி நகர் மூன்றாவது வீதியில் பல வருடங்களாக பூட்டிக் கிடக்கும் வீட்டின் பின்புறம் கிணறு ஒன்று அமைந்துள்ளது.
இங்கு பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான ரஞ்சித் குமார் என்பவர் தவறி விழுந்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்புத்துறையினர், 16 மணி நேரமாக கிணற்றுக்குள் சிக்கித் தவித்த இளைஞரை பத்திரமாக மீட்டனர்.