தென்காசி மாவட்டம், சுரண்டை அழகு பார்வதி அம்மன் கோயில் சித்திரை தேரோட்ட திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
சுரண்டை அழகுபார்வதி அம்மன் கோயில் சித்திரை திருவிழா, கடந்த ஏப்ரல் 30-ம் தேதி தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது.
அப்போது ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க, அழகு பார்வதி அம்மன் முக்கிய வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.