சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் அரசுப் பேருந்தும், ஜேசிபியும் மோதிக் கொண்ட விபத்தில் இருவர் படுகாயம் அடைந்தனர்.
மானாமதுரை பேருந்து நிலையத்திலிருந்து பரமக்குடியை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.
மேலப்பசலை அருகே சென்ற போது ஜேசிபி வாகனத்தின் மீது, அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பேருந்தில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 15 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. சிறு காயங்கள் ஏற்பட்டன.