நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் திட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என காட்டேஜ் உரிமையாளர் சங்கத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நீலகிரியில் மே 7-ஆம் தேதி முதல் இ-பாஸ் முறை நடை முறைபடுத்தப்பட்டு வருகிறது. இதனால், மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தாெழிலாளர்கள், கடை உரிமையாளர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை கண்டித்து மலர் கண்காட்சி நடைபெறும் நாளில் காட்டேஜ் மற்றும் உணவகங்களை அடைத்து போராட்டம் நடத்த உள்ளதாக உதகை காட்டேஜ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறியுள்ளனர்.