தமிழகத்தில் சொத்து பதிவுக்கான முத்திரைத் தாள் கட்டணம் அதிகரித்துள்ளதாக பத்திரப்பதிவுத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பெரும்பாலான சொத்துகளின் மீதான முத்திரைத் தாள் கட்டண வீதம் கடந்த 20 ஆண்டுகளாக உயர்த்தப்படாத நிலையில், தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வு கடந்த மே 3ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் 15 வகையான பத்திரப் பதிவு கட்டணம் அதிகரித்துள்ளது.
உதாரணத்துக்கு தத்து பத்திரத்தைப் பொறுத்தமட்டில் முத்திரைத் தாள் கட்டணம் 100 ரூபாயிலிருந்து ரூ.1,000 ஆக அதிகரித்துள்ளது.
பிரமாணப் பத்திரத்துக்கான முத்திரைத் தாள் கட்டணம் 20 ரூபாயிலிருந்து 200 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேபோல ஆவண பதிவை ரத்து செய்வதற்கான கட்டணம் 50 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதே ஒப்பந்தத்தை மீண்டும் செயல்படுத்துவதற்கான கட்டணம் 80ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.