வேலூர் மாவட்டம் லத்தேரியில் கோழிப்பண்ணை தீ பிடித்து எரிந்ததில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தது.
லத்தேரி அடுத்த மாலியப்பட்டு கிராமத்தை சேர்ந்த தினகரன் என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணை தீ பற்றியுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்ததாக கோழிப்பண்ணை உரிமையாளர் குற்றம்சாட்டியுள்ளார்.
தீ விபத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.