கோவில்பட்டி ஸ்ரீ வெயிலுகந்தம்மன்கோவிலில் சித்திரைப் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
இருபிரிவுகளாக நடைபெற்ற மாட்டு வண்டி எல்கைப் பந்தயத்தில் 30 ஜோடி மாடுகள் பங்கேற்றன.
இதில் வெற்றி பெற்ற காளைகள் மற்றும் அதன் உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது. இந்த போட்டியை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.