திருப்பூரில் உள்ள தனியார் விடுதியில் பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட இருவரை போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனர்.
தனியார் தங்கும் விடுதிகளில் பாலியல் தொழில் நடைபெறுவதாக வந்த தகவலின்பேரில், போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து விசாரனை மேற்கொண்ட போலீசார், விடுதியின் மேலாளர்கள் அருண், தமிழரசன் ஆகிய இருவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனர்.