நீலகிரி மாவட்டம், உதகை அருகே குடும்பத் தகராறில் மனைவியை கொடூரமாக அடித்துக் கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.
ஏக்குணி அருகே தட்டனேரி பாலத்தைச் சேர்ந்தவர்கள் மாணிக்கம் – பஞ்சகம் தம்பதி. கடந்த சில நாட்களாக இருவருக்குமிடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், பஞ்சகத்தை தரையில் அடித்து மாணிக்கம் கொடூரமாக கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த புதுமந்து போலீசார், பஞ்சகத்தின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், மாணிக்கத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.