தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு 1,200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
வார விடுமுறை நாட்களையொட்டி நாளை முதல் 12-ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
அதன்படி சென்னை கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய நகரங்களுக்குச் செல்ல நாளையும், நாளை மறுநாளும் தலா 55 சிறப்பு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
அதேபோல கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து நாளை 425 பேருந்துகளும், நாளை மறுநாள் 505 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. மொத்தமாக நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு 1,200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.