திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் மழையின் காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
மூன்று நாட்களாக ஏலகிரி மலையில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் கோடை வெப்பத்தை தணிக்க தமிழகம் மட்டுமின்றி வெளி மாநில சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வண்ணம் உள்ளது.
மேலும் ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்பதாலும் ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது.