ஆந்திராவில் லாரியில் 8 கோடி ரூபாய் பணத்தை கடத்திச் சென்ற இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
என்டிஆர் மாவட்டத்தில் உள்ள கரிகாபாடு சோதனைச் சாவடியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக பைப் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டதில், ரகசிய அறை அமைத்து 8 கோடி ரூபாய் பணத்தை ஹைதராபாத்தில் இருந்து குண்டூருக்கு கடத்திச் செல்வது தெரியவந்தது.
இதனையடுத்து பணத்தை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.