ராமநாதபுரத்திலிருந்து கீழக்கரை நோக்கி சென்ற அரசு பேருந்து கவிழ்ந்து விழுந்ததில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
தடம் எண் 1-ல் திருப்புல்லாணி அருகே சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கீழக்கரை வட்டாட்சியர் காயமடைந்தவர்களை மீட்டு தன்னுடைய வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.