நெல்லை மாவட்டம், தேவர்குளம் காவல்நிலையத்தை முற்றுகையிட முயன்ற பொதுமக்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர்.
இங்கு பணியாற்றும் காவலர்கள் குறிப்பிட்ட சமுதாயத்தினர் மீது பொய் வழக்கு பதிவு செய்வதாக கூறி ஏராளமானோர் காவல்நிலையத்தை முற்றுகையிட முயன்றனர்.
அப்போது காவலர்கள் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். இதில் இருதரப்புக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தினர்.