கும்பகோணத்தில் பாசன வாய்க்காலை மறைத்து அமைக்கப்பட்டு வரும் சாலைக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
உடையாளூர் பகுதியில் உள்ள பாசன வாய்க்காலை மறைத்து நெல் கொள்முதல் நிலையத்திற்கு செல்ல வசதியாக, தடுப்புச் சுவர்கள் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் உள்ள விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய பின் விவசாயிகள் கலைந்து சென்றனர்.