வேலூர் மாவட்டம், வேலங்காடு பொற்கொடியம்மன் கோயில் புஷ்பரத திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
வல்லண்டராமம், வேலங்காடு உள்ளிட்ட 4 கிராம மக்கள் ஒன்றிணைந்து திருவிழாவை நடத்தினர். மேளதாளம் முழங்க அம்மனின் புஷ்ப ரத புறப்பாடு நடைபெற்றது.
இதில் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.